/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்காளம்மன் கோவிலில் பூசாரிகள் பொறுப்பேற்பு
/
அங்காளம்மன் கோவிலில் பூசாரிகள் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 02, 2025 01:38 AM

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்யும் பொறுப்பை மூன்றாம் முறை பூசாரிகள் ஏற்றனர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பாரம்பரியமாக மீனவர் சமுதாயத்தை சேர்ந்த ஏழு கொத்து வம்சா வழியினர் அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்து வருகின்றனர். இவர்களுக்குள் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு முறை பூஜை செய்யும் முறையை மாற்றி கொள்கின்றனர்.
கடந்த ஓராண்டாக இரண்டாம் முறை பூசாரிகள் மதியழகன் தலைமையில் பூஜைகளை செய்து வந்தனர்.
இவர்களின் முறை கடந்த 30ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து மூன்றாம் முறை பூசாரிகள் சேட்டு என்கின்ற ஏழுமலை தலைமையில் பூஜை செய்வதற்கான பொறுப்பை ஏற்றனர். இதையடுத்து கோவில் வழக்கப்படி கோவிலின் சாவியை இரண்டாம் முறை பூசாரிகள், மூன்றாம் முறை பூசாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர்.