/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆபத்தான நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்
/
ஆபத்தான நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : டிச 10, 2024 07:09 AM

கண்டாச்சிபுரம்: இடிந்து விழும் நிலையில் உள்ள கண்டாச்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த வாரம் பெஞ்சல் புயல் மற்றும் மழையில் கட்டடம் மேலும் பலவீனமடைந்துள்ளது.
இதனால், மருத்துவமனை அருகில் உள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கண்டாச்சிபுரம் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டி, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.