/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2025 06:49 AM

விழுப்புரம் : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் காண்டீபன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டபாணி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் வாழ்த்தி பேசினர்.
இதில், 2025-26ம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி துறையில் பணி ஓய்வுபெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் சிவசங்கர், மகிமைதாஸ், கணபதி, ஜெயச்சந்திரன், முகமது மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.