/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திட்டப்பணிகளை விரைவாக முடிக்க முதன்மை செயலர் அறிவுரை
/
திட்டப்பணிகளை விரைவாக முடிக்க முதன்மை செயலர் அறிவுரை
திட்டப்பணிகளை விரைவாக முடிக்க முதன்மை செயலர் அறிவுரை
திட்டப்பணிகளை விரைவாக முடிக்க முதன்மை செயலர் அறிவுரை
ADDED : மே 16, 2025 11:18 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு முதன்மை செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பங்கேற்று, கோடை கால குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம், கனவு இல்ல வீடுகள் கட்டும் பணி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள், அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விபரம், காலை உணவு திட்ட செயல்பாடுகள், கூட்டுறவுக் கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்ட விபரங்களை, துறைசார்ந்த அலுவலர்களிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.
மாவட்டத்தில் நடந்து வரும் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதன்மை செயலர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா, சப் கலெக்டர் திவ்யான்ஷிநிகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

