/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டையில் முதன்மை செயலர் ஆய்வு
/
செஞ்சி கோட்டையில் முதன்மை செயலர் ஆய்வு
ADDED : ஜூலை 18, 2025 05:04 AM

செஞ்சி: செஞ்சி கோட்டையில் அடிப்படை வசதிகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலர் ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் முதன்மைச் செயலர், போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள செஞ்சி கோட்டையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செஞ்சிக்கோட்டையில் ராஜகிரி கோட்டையின் தரைப்பகுதியில் உள்ள தர்பார், படைவீரர்கள் குடியிருப்பு, நெற்களஞ்சியம், கல்யாண மஹால், உடற்பயிற்சி கூடம், யானை குளம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் புதிய ஒருங்கிணைந்த தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக இடங்களை ஆய்வு செய்தார்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் தாய் சேய் நலக் கட்டடம், செவலபுரையில் சிறுவாடி ஆலமொன்று இடையே சங்கராபரணி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் கண்ணன், மண்டல போக்குவரத்து அலுவலர் பட்டாபிசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், செஞ்சி தாசில்தார் துரைச்செல்வன், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபு சங்கர், வரலாற்று ஆர்வலர் முனுசாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.