/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்
/
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்
ADDED : மே 17, 2025 11:35 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வழுதரெட்டி விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் சரவணன்,36; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 15ம் தேதி குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த சரவணின் தாய் பராசக்தி, நேற்று முன்தினம் இரவு அதே பகுதி வீட்டிற்கு சென்று துாங்கினார்.
நேற்று காலை 5.00 மணிக்கு சரவணன் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 அரை சவரன் நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.