/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுமி இறந்த தனியார் பள்ளி 16 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு
/
சிறுமி இறந்த தனியார் பள்ளி 16 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு
சிறுமி இறந்த தனியார் பள்ளி 16 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு
சிறுமி இறந்த தனியார் பள்ளி 16 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு
ADDED : ஜன 20, 2025 06:32 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்ததால் மூடப்பட்ட தனியார் பள்ளி 16 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது.
விக்கிரவாண்டியில் உள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., படித்த அதே ஊரைச் சேர்ந்த பழனிவேல் மகள் லியா லட்சுமி,4: கடந்த 3ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவு நீர்தொட்டியில் விழுந்து இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
மேலும், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7 ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், இப்பள்ளியில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று மாலை பள்ளி இன்று (20ம் தேதி) திறக்கப்படுவதாகவும், அனைவரும் முழுசீருடையில் காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு வருமாறு மொபைல் போன்களில் குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
சிறுமி இறந்ததால், மூடப்பட்ட பள்ளி 16 நாட்களுக்கு பிறகு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்படுகிறது.