/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
/
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : நவ 16, 2024 05:07 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாம் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 2:00 மணி நடந்த முகாமை வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குனர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். முகாமில் 29 வேலையளிக்கும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றன. 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேர்காணலில் பங்கேற்றனர்.
முகாமில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 15 பேர், இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நான் முதல்வன் திட்டம்
விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெமினாசெல்வி வரவேற்றார். அரசு கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக உதவி இயக்குநர் நடராஜன் பேசினார். முகாமில், 17 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.
இதில் அரசு பொறியியல் கல்லுாரிகள், அரசூர் வி.ஆர்.எஸ்., விக்கிரவாண்டி சூர்யா, கப்பியாம்புலியூர் ஏ.ஆர்., கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 600 பேர் பங்கேற்றனர்.
இதில் 250 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.