ADDED : பிப் 14, 2024 03:27 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மையம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம், விழுப்புரம் மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாய கல்லுாரிகள் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
துாய இருதய கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி துவக்கி வைத்து, தேர்வான மாணவ, மாணவிகள் 50 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.
சேலம் மண்டல இணை இயக்குனர் லதா, துணை இயக்குனர் மணி, துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பாலமுருகன், கல்லுாரி செயலாளர் பிரிட்டோ, முதல்வர் டேவிட் சவுந்தர், பேராசிரியர் செந்தில் குமார், ஊராட்சி தலைவர் சேகர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
