ADDED : மார் 15, 2025 08:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்; வெள்ளக்குளம் வி.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம் சார்பில், மகளிர் தின விழா, நிறுவனர் மார்ட்டின் நினைவு தின பரிசளிப்பு விழா மற்றும் முறைசாரா பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு வி.சி.டி.எஸ்., செயலாளர் கவுசல்யா மார்டின் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மரியஅந்தோணி முன்னிலை வகித்தார். வி.சி.டி.எஸ்., திட்ட மேலாளர் ஜோஸ்பின் பவித்ரா தேவி வரவேற்றார்.
விழாவில் பெருமுக்கல் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ரேகா, திண்டிவனம் வழக்கறிஞர் கோமதி ரவிச்சந்திரன் ஆகியோர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர். மேற்பார்வையாளர் பூபாலன் நன்றி கூறினார்.