ADDED : ஜன 10, 2026 07:02 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தமிழக விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று, தேசிய அளவில் பங்கேற்க உள்ள மாணவர்கள் மற்றும் தமிழோடு விளையாடு, வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி, தமிழ் திறனறித் தேர்வு மற்றும் ஜெயேந்திரா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு, பள்ளி தாளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார்.
மகாலட்சுமி குழும உறுப்பினர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
