ADDED : ஆக 31, 2026 07:22 PM
வானுார்: பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, குயிலை கல்விக் கூட மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், ஆரோவில் குயிலை கல்விக் கூட மாணவர்கள் பங்கேற்று, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அதேபோல், ராணிப்பேட்டையில் நடந்த மாநில அளவிலான டென்னிஸ், கிரிக்கெட் போட்டியிலும் இம்மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா குயிலை கல்விக் கூடத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார், இ.எஸ்.எஸ்., பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன், ஐக்கியம் பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியை தவசெல்வி, ரீடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன், குயிலை கல்விக் கூட நிர்வாகி செந்தில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கினர்.
விழாவில், கல்வி மற்றும் சமூகப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஐக்கியம் பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், தலைமை ஆசிரியை தவசெல்வி ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை குயிலை கல்விக் கூட ஆசிரியர் முத்துக்குமாரி, கராத்தே பயிற்சியாளர்கள் லெனின், கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் அஞ்சனா, ருக்மணி, காயத்ரி, கவிதா, தர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர். குயிலை கல்விக் கூட நிறுவனர் ராம்குமார் நன்றி கூறினார்.
