ADDED : பிப் 09, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்த நாகராஜ பூபதி, திண்டுக்கல் மாவட்ட பி.ஆர்.ஓ.,வாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட பி.ஆர்.ஓ., (பொறுப்பு) கலைமாமணி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பொருட்காட்சி பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சதீஷ், விழுப்புரம் மாவட்ட பி.ஆர்.ஓ., வாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

