ADDED : மார் 30, 2026 11:31 PM
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பகுதியில் சின்னங்கள் வரைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. நேற்று முதல் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேல்மலையனுார் பகுதியில் செஞ்சி தொகுதி வேட்பாளர்களின் சின்னங்களான உதயசூரியன், மாம்பழம் ஆகியவை பெரும்பாலான இடங்களில் வரைய துவங்கி உள்ளனர். சுவர் விளம்பரங்கள் வரைவதில் தேர்தல் ஆணையம் சில விதி முறைகள் விதித்துள்ளது.
சுவரில் சின்னம் வரையும் முன்னர், வீட்டின் உரிமையாளர் அனுமதியை கட்சிக்காரர்கள் கடிதமாக பெற வேண்டும்.
பின்னர் இந்த கடிதத்தை அந்தந்த ஊர் வி.ஏ.ஓ., விடம் கட்சிக்காரர்கள் அளித்து, தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெற வேண்டும். இதன் பிறகு தான் சுவரில் விளம்பர சின்னம் வரையவேண்டும் என்பது விதி.
இந்த விதிகளை கடைபிடிக்காமல் கிராமங்களில் வரைந்துள்ள சின்னங்களினால் கட்சிக்காரர்களுக்கிடையே பிரச்னை ஏற்படுகிறது.
ஒருவொருக்கொருவர் தேர்தல் அலுவலரிடம் மற்றும் வி.ஏ.ஓ.,விடம் அனுமதி பெறாமல் வரையப்பட்டுள்ளது என புகார் அளித்து வருகின்றனர்.
இதனால் வீட்டு சுவர்களில் கட்சி சின்னங்களை வரைவதில் சிக்கலும், கால தாமதமும் ஏற்பட்டுள்ளது.
