/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலத்தில் விளை பொருட்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மேம்பாலத்தில் விளை பொருட்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மேம்பாலத்தில் விளை பொருட்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மேம்பாலத்தில் விளை பொருட்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 26, 2025 12:28 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் விவசாய பயிர்களை காய வைத்து மூடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணை ஆற்றில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து ஏனாதிமங்கலம், சித்தலிங்கமடம், திருவெண்ணெய்நல்லுார் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு விழுப்புரத்தில் இருந்து பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை நோக்கி செல்ல மேம்பாலத்தை கடந்து சென்றால் குறுகிய நேரமாவதால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் இந்த வழியை பயன்படுத்தி செல்கின்றனர். இந்த சாலையில் உள்ள மேம்பாலத்தில் மின்விளக்கு வசதியில்லை.
இந்நிலையில், மேம்பாலத்தில் விவசாயிகள் பலர் தாங்கள் விளைவித்த நெற்பயிர்கள், எள்ளு ஆகியவற்றை களமாக அமைத்து பகலில் காயவைக்கின்றனர். இரவில், அந்த மேம்பாலத்திலேயே விளை பொருட்களை மூடி வைக்கின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், விளை பொருட்கள் மூடியிருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 4 பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். விவசாயிகள் மேம்பாலத்தில் பயிர்களை காயவைப்பதை நிறுத்துவதோடு, இங்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வெளிச்சத்திற்காக மின் விளக்குகள் வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.