/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டையில் உழவரைத் தேடி திட்டம்
/
அவலுார்பேட்டையில் உழவரைத் தேடி திட்டம்
ADDED : மே 31, 2025 12:44 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பகுதியில் 2 இடங்களில் உழவரைத் தேடி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் துவக்கி வைத்தார்.
மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் உழவரைத் தேடி வேளாண் உழவர் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கி வேளாண் துறை மூலம் நல திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு பேசினார்.
ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்விராமசரவணன் ,ஷாகின் அர்ஷத், கலா , அட்மா திட்ட தலைவர் சம்பத், வேளாண் உதவி அலுவலர்கள் சக்திவேல், விஸ்வநாதன், துணை வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அண்ணமங்கலம் கிராமத்திலும் இந்த திட்டம் துவங்கப்பட்டது.