/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் ஒன்றியத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
வானுார் ஒன்றியத்தில் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 08, 2025 11:42 PM

விழுப்புரம்; வானுார் ஒன்றியம், திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர், சேமங்கலம் ஊராட்சியில், ஜன்மன் திட்டத்தின் கீழ், 35 இருளர் இன பழங்குடியினர் மக்களுக்கு தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின், காட்ராம்பாக்கம் ஊராட்சியில், 19 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கான இட வசதிகளை ஆய்வு செய்தார்.
பட்டானுார் குக்கிராமத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து அவர் ஆய்வு செய்தார்.
சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், துணை இயக்குநர் சுமதி, தாசில்தார் வித்யாதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

