/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஏ.ஓ.,வை தாக்கியதை கண்டித்து போராட்டம்
/
வி.ஏ.ஓ.,வை தாக்கியதை கண்டித்து போராட்டம்
ADDED : டிச 08, 2024 05:42 AM

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே வி.ஏ.ஓ.வை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.ஏ. ஓ., சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள ஆனந்தூர் கிராமத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம வி.ஏ.ஓ., வெங்கடேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் இரவு நிவாரணம் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சார்ந்த ஆறுமுகம், கண்ணன், தமிழ்மணி, சிரஞ்சீவி ஆகிய நான்கு பேர்கள் சேர்ந்து மற்ற பகுதிகளுக்கு அதிக நிவாரண பொருட்கள் வழங்கிவிட்டு எங்களுக்கு வெறும் அரிசி மட்டும் வழங்குகிறீர்கள் எனக் கேட்டு வி.ஏ.ஓ., விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.
இந் நிலையில் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லுார் போலீசார், ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், தமிழ்மணி, கண்ணன், சிரஞ்சீவி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் வி.ஏ.ஓ., மீது நடந்த தாக்கு தலை கண்டிக்கும் வகையில் வி.ஏ.ஓ.,க்கள் சங்க நிர்வாகிகள் நேற்று காலை 10:00 மணி அளவில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைஎடுத்து போலீசார் பேச்சுவார்த்தையின் பெயரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.