/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கண்டமங்கலம் அருகே பரபரப்பு
/
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கண்டமங்கலம் அருகே பரபரப்பு
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கண்டமங்கலம் அருகே பரபரப்பு
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கண்டமங்கலம் அருகே பரபரப்பு
ADDED : அக் 26, 2025 04:58 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த எஸ்.ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி, 65; இவர் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய கிராம சுடுகாடு பகுதியில் பள்ளம் தோண்ட சென்றனர்.
அப்போது சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை இரும்பு கேட்டால் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு வந்த சேஷங்கனுார் பகுதியைச் சேர்ந்த செந்தமிழன் என்பவர், இது தனக்கு சொந்தமான இடம் பட்டா உள்ளது. இங்கு உடலை அடக்கம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர்.
தகவல் அறிந்த ஒன்றிய சேர்மன் வாசன் தலைமையில், ஊராட்சி தலைவர்கள் லலிதாகுமரன், இளவரசி, கண்டமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் தேவசேனா, வி.ஏ.ஓ., பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த பகுதி தனி நபருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் சுடுகாட்டுப் பகுதிக்கு அருகே அரசு புறம்போக்கு இடத்தில் உடலை அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பகுதியை தனி நபர் ஆக்கிரமிப்பை கண்டித்தும், தனி நபருக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

