/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசு டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 03, 2025 07:11 AM

திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆர்த்தோ டாக்டராக பணியாற்றுபவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 31ம் தேதி வானுார் அரசு மருத்துவமனைக்கு அயல்பணியாக பணியாற்றியுள்ளார். அப்போது துருவை கிராமத்தை சேர்ந்த முத்துவேல் உள்ளிட்ட 3 பேர், டாக்டரிடம் மருத்துவ சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு நான் ரெகுலர் டாக்டர் இல்லை என்றும், அடுத்த நாள் பணிக்கு வரும் டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு முத்துவேல் தரப்பினர் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். டாக்டர் சுரேஷ்குமார் வானுார் போலீசில் மூன்று பேர் மீது புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 12.45 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் சம்பத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கொலை மிரட்டல் விடுத்தவர்களை டாக்டர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

