/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாஜி அ.தி.மு.க., அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மாஜி அ.தி.மு.க., அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மே 14, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: முன்னாள் அமைச்சரை கண்டித்து விழுப்புரம் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நலச்சங்க தலைவர் அருளப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சாலமன்ராஜ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் செல்வமணி, பொருளாளர் ரங்கநாதன் கண்டன உரையாற்றினர். இந்திய ராணுவம் குறித்து தவறாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்தும், அவரது கேளிக்கை பேச்சை நிறுத்தி ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு கேட்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. செய்தி தொடர்பாளர் இருதயநாதன் நன்றி கூறினார்.