/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர் சேர்க்கை துவங்காததை கண்டித்து போராட்டம்
/
மாணவர் சேர்க்கை துவங்காததை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூலை 04, 2025 02:07 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்ணா மலை பல்கலை முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கை துவங்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு, அண்ணாமலை பல்கலைக்கு மட்டும் கடந்த மே 10ம் தேதி வெளியிடப்பட்டது.
விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்திற்கு தற்போது வரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தினந்தோறும் மாணவர்கள் வந்து ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.
மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடாததை கண்டித்தும், உடனே அறிவிப்பு வெளியிடக்கோரியும் நேற்று அண்ணாமலை பல்கலை விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்தில் கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:
அண்ணாமலை பல்கலை, விழுப்புரம் முதுகலை விரிவாக்க மையத்தை நிரந்தரமாக மூடும் போக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மாணவர்கள் நலன் மற்றும் இங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு உரிய பல்கலை நிர்வாகம் அல்லது முதல்வர் கவனத்தில் கொண்டு, கல்லுாரி தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு விரைவாக வெளியிட வேண்டும். இந்த கல்லுாரிக்கு மாணவர்கள், விரிவுரையாளர்கள் வர சாலை வசதி, பஸ் வசதிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.