/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு கல்லுாரியில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
/
விழுப்புரம் அரசு கல்லுாரியில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அரசு கல்லுாரியில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அரசு கல்லுாரியில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 22, 2024 02:32 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கல்லுாரியில், ஆசிரியர் கழகம் சார்பில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். பொருளாளர் அசோகன், நிர்வாகிகள் விஜயரங்கம், தண்டாயுதபாணி உட்பட சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத்தை அரசு செயல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்ப்ப்பெற வேண்டும். ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65ஆக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசின் நிதி பங்களிப்பை வழங்க வேண்டும், முனைவர் பட்டம் மற்றும் நிறைஞர் பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.