/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 25, 2024 11:35 PM
விழுப்புரம்; விழுப்புரத்தான் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொது நல அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு, நீர்நிலைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில், விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அகிலன் தலைமை தாங்கினார்.
விவசாய சங்க மாவட்ட தலைவர் கலிவரதன் கண்டன உரையாற்றினார். விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் விழுப்புத்தான் வாய்க்காலை முழுமையாக அளந்து, அதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தென்பெண்ணை ஆற்றில் இருந்து, அதில் நிரந்தரமாக தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும், அந்த வாய்க்கால் நிலத்தை நத்தமாக மாற்றி பட்டா வழங்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
நகரில் வாய்க்கால் தொடரும் வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.