/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடையை மீறி போராட்டம்: அ.தி.மு.க.,வினர் 605 பேர் கைது
/
தடையை மீறி போராட்டம்: அ.தி.மு.க.,வினர் 605 பேர் கைது
தடையை மீறி போராட்டம்: அ.தி.மு.க.,வினர் 605 பேர் கைது
தடையை மீறி போராட்டம்: அ.தி.மு.க.,வினர் 605 பேர் கைது
ADDED : டிச 31, 2024 06:30 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உட்பட 605 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில், விழுப்புரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
போலீசார் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் 60 பேரையும், அ.தி.மு.க., நகரச் செயலர் பசுபதி தலைமையில் 165 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே மாவட்ட செயலர் சண்முகம் தலைமையில், காலை 11:00 மணிக்கு ஊர்வலமாக வந்த அ.தி.மு.க.,வினர் 380 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 605 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், நகரச் செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், ஒன்றியச் செயலர்கள் சுரேஷ்பாபு, முருகன், ராமதாஸ், கண்ணன், புலியனுார் விஜயன், கிருஷ்ணமூர்த்தி, விநாயகமூர்த்தி, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி அற்புதவேல், மாநில ஜெ.,பேரவை மாநில துணை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், அணி நிர்வாகிகள் சக்திவேல், பிரித்விராஜ், பிரஸ் குமரன், டாக்டர் முத்தையன், கோகுல்ராஜ், திருப்பதி பாலாஜி, செந்தில்வேலன், ஜெகதீஸ்வரி, நகர்மன்ற கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோல்டு சேகர், கலை உட்பட பலர் பங்கேற்றனர்.