/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வல்லம் ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டம், மறியல்
/
வல்லம் ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டம், மறியல்
ADDED : டிச 21, 2024 05:17 AM

செஞ்சி: வல்லம் ஒன்றியத்தில் வெள்ள நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
வல்லம் ஒன்றியம் மேலாத்தூர் கிராம பொது மக்கள் வெள்ள நிவாரண தொகை கேட்டு நேற்று காலை 11 மணியளவில் வவ்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி தாசில்தார் ஏழுமலை, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து 1 மணியளவில் கலைந்து சென்றனர்.
இதே போல் வல்லம் ஒன்றியம் அம்மன்குளத்துமேடு கிராம மக்கள் காலை 9.30 மணியளவில் செஞ்சி-ரெட்டணை சாலையில் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த செஞ்சி போலீசார் மற்றும் வருவாயத்துறையினர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வெள்ள நிவாரணம் பெற்று தறுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து 10.30 மணியளவில் பொது மக்கள் மறியலை கைவிட்டனர்.