
விக்கிரவாண்டி : விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து விக்கிரவாண்டியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி வட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
பொருளாளர் தாமோதரன் வட்ட துணைத் தலைவர் கபரியேல் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கல்வராயன் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் கலியமூர்த்தி, தலைவர் சேகர், பொருளாளர் குமார், மாவட்ட குழு அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்தும் 100 நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்பு பேரில் நாடு முழுவதும் 11 கோடி பேரை வேலையை விட்டு நீக்கியதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.