/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
/
குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
குப்பை மறுசுழற்சி மையம் கட்ட எதிர்ப்பு பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : நவ 24, 2024 04:54 AM

கோட்டக்குப்பம் : பெரிய முதலியார்சாவடி பகுதியில் குப்பை மறுசுழற்சி மையம் கட்டுவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணியை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் முழுதும் கோட்டைமேடு பகுதியில் கொட்டப்பட்டுகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பெரிய முதலியார்சாவடி பகுதியில் நகராட்சி மூலம் புதிதாக குப்பை மறுசுழற்சி மைய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணி துவக்கத்தில் இருந்தே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் கட்டுமான பணிக்கான பில்லர் அமைக்கும் பணிகள் நடந்தது. 10:30 மணிக்கு, அப்பகுதி மக்கள் திரண்டு கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
துப்புரவு ஆய்வாளர் தின்னாயிரமூர்த்தி, பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பகுதியில் குப்பை மறு சுழற்சி மையம் கொண்டு வந்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, எங்கள் பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். நீர்நிலை ஓடையும் மறைந்து விடும்.
எனவே குப்பை மறுசுழற்சி மையம் தேவையில்லை என தெரிவித்தனர்.
அதிகாரிகள் சமாதானம் செய்தும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி கமிஷனரை சந்தித்து பேசும் படி, அதிகாரிகள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.