/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை நிவாரணம் வழங்காததால் மறியல் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
/
மழை நிவாரணம் வழங்காததால் மறியல் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
மழை நிவாரணம் வழங்காததால் மறியல் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
மழை நிவாரணம் வழங்காததால் மறியல் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 12, 2024 08:04 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து, கொட்டும் மழையில் மக்கள் மறியலில் ஈடுபட்டதால், புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் நகரில் சில வார்டுகளில் மழை வெள்ள நிவாரணம் தராததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் சந்தான கோபாலபுரம் அருகே மருதுார்மேடு, பாட்டை பள்ளத்தெரு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய நகராட்சி 16,18, 19வது வார்டு பகுதி மக்கள், தங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்காதததை கண்டித்து, நேற்று காலை 10.00 மணிக்கு மாதா கோவில் சந்திப்பில், கிழக்கு பாண்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் செல்வவிநாயகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் தெரிவித்து, இப்பகுதிக்கும் நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று, 10.45 மணிக்கு பொது மக்கள் கலைந்து சென்றனர்.
மறியல் செய்தவர்கள் அடாவடி
மறியலால் புதுச்சேரி நெடுஞ்சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. மறியலின்போது இரு சக்கர வாகனங்களில் வேலைக்கு சென்ற ஊழியர்களுக்கு வழி விடாமல் சிலர் தடுத்தனர். காலியாக வலதுபுறம் இருந்த சந்தானகோபாலபுரம் சாலையிலும், இடதுபுறம் கல்லுாரி சாலை வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முயன்றபோது, சிலர் வாகன சாவியை பறித்து மிரட்டினர்.
இரு சக்கர வாகனங்களை திரும்பி செல்லவும் விடாமல், பெண்கள் ஓட்டி வந்த டூவீலர்களை பிடித்து இழுத்தும், சிலர் கேரோ செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேபோல, செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர், கொணலுார் மதுரா புதுப்பேட்டை, மரக்காணம் அருகே மானுார் மற்றும் ஆத்துார் கிராம மக்கள் வெள்ள நிவாரணம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

