UPDATED : நவ 23, 2026 06:34 PM
ADDED : நவ 23, 2026 06:30 PM

அ நிறம் | அளவு
செஞ்சி: அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் செஞ்சி சத்தியம் அன்னதான குழு தலைவர் வழக்கறிஞர் சத்தியசீலன் 25க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு போர்வைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் ரோட்டரி குழும நிர்வாகிகள் பங்கேற்றனர்.
