/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீசாரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
/
போலீசாரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : மார் 30, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார், அமைச்சுப் பணியார்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும், போலீசார், அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதையொட்டி, கலை, அறிவியல் படிப்புகளுக்கு 13 ஆயிரம் ரூபாய், பொறியியல் படிப்புக்கு 20 ஆயிரம் ரூபாய், மருத்துவ படிப்புகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 45 பேருக்கு மொத்தம் 8.63 லட்சம் ரூபாய்க்கான காசோலையை எஸ்.பி., வழங்கினார்.