/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ., கல்வி உதவித்தொகை வழங்கல்

ADDED : ஆக 25, 2025 11:13 PM

செஞ்சி:
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நடந்தது.
மாவட்ட தலைவர் பழனி தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் வீரம்மாள், துணைச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். 13 மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 1.27 லட்சம் ரூபாயை கல்வி உதவித் தொகையாக மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், துரை, நிர்வாகிகள் அன்சாரி, பிரகாஷ், பாஷா, நரசிம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.