/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்
/
தீ விபத்தில் பாதித்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்
ADDED : செப் 23, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் சிவராமன் - சரண்யா தம்பதியர் வீடு கடந்த 20ம் தேதி தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசமானது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திருமங்கலம் ஊராட்சி தலைவர் மதியழகன் ஆறுதல் கூறி, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் அவரது சொந்த செலவில் 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
கண்டமங்கலம் கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார், ஊராட்சி துணைத் தலைவர் பாக்கியலட்சுமி அருள் உடனிருந்தனர்.