/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்
/
எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்
ADDED : மார் 30, 2025 03:04 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலை விபத்தில் இறந்த சிறப்பு எஸ்.ஐ., குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய்க்கான நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம், வழுதரெட்டி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 57; எஸ்.பி., அலுவலகத்தில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். கடந்த 13ம் தேதி பைக்கில் சென்ற போது கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி 24ம் தேதி இறந்தார்.
இறந்த சிறப்பு எஸ்.ஐ., குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் 30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று இறந்த சிறப்பு எஸ்.ஐ., குடும்பத்திற்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் கூறி 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், எஸ்.பி., சரவணன் உடனிருந்தனர்.