/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : மே 31, 2025 11:53 PM

செஞ்சி: செஞ்சியில் 15 மாற்றுத் திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., 15 மாற்றுத்திறனாளிகளுக்கு 15.27 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கினார்.
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், துணை பி.டி.ஓ., பழனி, ஊராட்சி தலைவர்கள் ரவி, தாட்சாயணி கார்த்திகேயன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.