/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு ஆடாதொடா நடவுக்கன்றுகள் வழங்கல்
/
விவசாயிகளுக்கு ஆடாதொடா நடவுக்கன்றுகள் வழங்கல்
ADDED : அக் 26, 2025 10:32 PM

வானுார்: வானுார் அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உயிரி பூச்சிவிரட்டி பண்புடைய ஆடாதொடா, நொச்சி நடவுக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டன.
வானுார் தாலுகாவிற்கு நடப்பாண்டிற்கு முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய உயிரி பூச்சிவிரட்டி பண்புடைய தாவரங்களான ஆடாதொடா, நொச்சி போன்ற நடவுகன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்படுள்ளது.
அரசு விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு ஆடாதொடா, நொச்சி நடவு கன்றுகளை வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டினை குறைத்து, மண் வளத்தை மேம்படுத்தி, சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதே முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த கன்றுகளை விவசாயிகள் தரிசு நிலத்திலும், வயலில் உள்ள வரப்பு ஓரங்களிலும் நடவு செய்யலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 10 கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
தேவைப்படும் விவசாயிகள் முன்கூட்டியே உழவர் செயலியில் பதிவு செய்யலாம். மேலும் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திடலாம் என எத்திராஜ் தெரிவித்தார்.

