/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மானிய திட்டத்தில் விவசாய கருவிகள் வழங்கல்
/
அரசு மானிய திட்டத்தில் விவசாய கருவிகள் வழங்கல்
ADDED : ஆக 12, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்,மானிய விலையில் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கால்நடைத் துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின் விசையில் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கப்பட்டது. கருவிகளை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பிரசன்னா, துணை இயக்குநர் செந்தில்நாதன், உதவி இயக்குநர் ஜெய்சிராணி மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.