/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
/
அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஏப் 24, 2025 05:27 AM

திருவெண்ணெய்நல்லூர்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இரு அரசு பள்ளிகளுக்கு குவால்காம் நிறுவனம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஏமப்பூர் அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளி, சிறுமதுரை அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு, சென்னை, குவால்காம் நிறுவன சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஏமப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர் தனசேகரன் தலைமை தாங்கினார். குவால்காம் சி.எஸ்.ஆர்., லீட் முரளி முன்னிலை வகித்தார்.
முதுநிலை மேலாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்மார்ட் வகுப்பறைகள், 40 மடிக்கணினிகள், ஆய்வக உபகரண பொருட்கள், நூலகத்திற்கான புத்தகங்கள், ஒலிபெருக்கி சாதனங்கள், பேண்ட் இசை வாத்தியங்கள், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டிற்கான உபகரணங்கள் வழங்கினார்.
குவால்காம் நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்ட கழிப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஐ. ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன், சிறுமதுரை பள்ளி தலைமையாசிரியர் அருள்பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சௌந்தர்யா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருளரசன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சோலையப்பன், சர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் சிறுமதுரை அரசினர் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.

