/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானிய விலையில் இடுபொருள் வழங்கல்
/
மானிய விலையில் இடுபொருள் வழங்கல்
ADDED : அக் 07, 2024 07:54 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த சிறுவாடியில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் சிறுவாடி துணை வேளாண் விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தவும், பி.எம்., கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி., செய்திடவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், விவசாயிகளுக்கு நெல், வீரிய ஒட்டு மக்காச்சோள விதை, உளுந்து விதைகளை 50 சதவீத மானியத்தில் வழங்கினார்.
மரக்காணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரவணன், துணை வேளாண் அலுவலர் கதிரேசன், உதவி வேளாண் அலுவலர்கள் ரஞ்சனி, ராஜேஸ்வரி, கிடங்கு மேலாளர் கீதா உடனிருந்தனர்.

