ADDED : நவ 24, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்ட விழா நடந்தது.
விழாவிற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனேசன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்றார். மருத்துவர் அபிஷேக் சிறப்புரையாற்றினர்.
விழாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 183 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.