/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : ஜன 06, 2025 05:29 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.1,10,000 வீதம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரை, அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக்அலி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.