ADDED : ஆக 03, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் துப்புரவு பணியாளர்கள் மற்றும் துாய்மைக் காவலர்கள் 305 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி, துாய்மை பணியாளர்களின் கடமைகள், அவர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கி, அவர்களுக்கு சீருடை, ரெயின் கோட், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பி.டி.ஓ., சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், மண்டல துணை பி.டி.ஓ., கவுதம், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியமூர்த்தி, விஜயகுமாரி, ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.