/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
ADDED : ஜன 15, 2025 12:13 AM

விழுப்புரம் : மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்காக, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகள் சிலர், கால் இழந்த நிலையில் தவிக்கும் தங்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, கால் இழந்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
அதன்படி தலா ரூ.6,350 மதிப்புள்ள மூன்று தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவியாக நேற்று கலெக்டர் பழனி வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, பேச்சு பயிற்சியாளர் அபிசேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

