/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பதவி இழந்தும் பொன்முடிக்கு பாதுகாப்பு பணியில் பி.எஸ்.ஓ.,க்கள்

ADDED : மார் 07, 2024 11:01 AM

விழுப்புரம்: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்.எல்.ஏ., பதவி காலியானது. அதோடு அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் வகையில் தொகுதி காலியாக இருக்கிறது என தேர்தல் கமிஷனும் அறிவித்துவிட்டது. தற்போது அந்த தொகுதிக்கு அவரது மகன் கவுதம சிகாமணி வேட்பாளரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அக்கட்சியில் நீண்ட காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகளும் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர்.
அமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ., பதவியும் பறிபோன நிலையில் பதவியில் இருந்தது போல் பாதுகாப்பு தரும் வகையில் அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த 3 பாதுகாப்பு அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் மூவரையும் பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.