/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு
/
மேல்மலையனுாரில் பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு
மேல்மலையனுாரில் பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு
மேல்மலையனுாரில் பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு
ADDED : நவ 12, 2024 08:22 PM

அவலுார்பேட்டை; மேல்மலையனுாரில் பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மேல்மலையனுாரில் 3.68 கோடி ரூபாய் மதிப்பிலான பி.டி.ஓ., அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., மஸ்தான் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன், பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத்முகமத் முன்னிலை வகித்தனர்.
இதில் செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார்அலி, ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், யசோதரை , கலா, சியாமளா, ஊராட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.