ADDED : செப் 10, 2026 04:52 PM
கோட்டக்குப்பம்: பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தர வேண்டும் என கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷ்னர் துர்கா தேவி அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில் வீடு வீடுடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுரையின்படி அனைத்து நகராட்சிகளிலும் இரண்டு வார்டுகளை மாதிரி வார்டுகளாக எடுத்து, 100 சதவீதம் வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரித்தல் மற்றும் கழிவுகளை 100 சதவீதம் பிரித்து வாங்கும் பணி மேற்கொள்ள தெரிவித்துள்ளனர்.
எனவே கோட்டக்குப்பம் நகராட்சியில் வார்டு எண்: 3, பெரிய முதலியார்சாவடி, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் வார்டு எண்:20 ஹாஜி உசேன் தெரு பகுதியை சேர்ந்த வீடுகளில், 100 சதவீதம் கழிவுகளை சேகரித்தல் மற்றும் பிரித்து வாங்குதல் தொடர்பாக, அந்த பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
