/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி., பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுரை
/
குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி., பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுரை
குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி., பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுரை
குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி., பயன்படுத்த பொது மக்களுக்கு அறிவுரை
ADDED : டிச 31, 2024 06:27 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, மின்சாதனங்களை பாதுகாப்பாகவும், கவனமாகவும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் டிசம்பர் மாதம் மின் சிக்கன வார விழா கடை பிடிக்கப்படுகிறது. பொது மக்கள், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த, வீடுகளில் குண்டு பல்புகளுக்கு பதிலாக எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தலாம். முழு அளவில் வெளிச்சம் பெறுவதற்கு, மின் விளக்குகளை சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
அதிக ஸ்டார் குறியீடு மின் சாதனங்களை பயன்படுத்தவதும், பிரிட்ஜ் உள்ளே சேரும் ஐஸ் கட்டியினை அடிக்கடி நீக்கம் செய்து பயன்படுத்தவும், ஏ.சி., அறையை நன்கு மூட வேண்டும்.
இதே போல், மின் சிக்கனத்திற்கு ஏ.சி., 25 டிகிரி சென்டி கிரே ட் அளவில் வைத்து பயன்படுத்தலாம். மின்சார ஹீட்டர்களுக்கு பதிலாக சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம்.
மின் பாதுகாப்பிற்கு, ஒவ்வொரு வீட்டிலும் சரியான எர்த் பைப் போட வேண்டும், வீடுகளில் மெயின் சுவிட்ச் போர்டில் சர்கியூட் பிரேக்கர் பொருத்த வேண்டும், ஐ.எஸ்.ஐ., முத்திரை பதித்த மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
மின் சாதன சுவிட்சுகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்களின், ஸ்டே ஒயர்களின் அருகே செல்லக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.