/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
/
வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜன 08, 2025 05:18 AM

திருவெண்ணெய்நல்லுார் :   திருவெண்ணெய்நல்லுார் அருகே வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க வேண்டிய பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவெண்ணெய்நல்லுார்  அடுத்த திருமுண்டிசரம் கிராம காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மலட்டாறு வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதில் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கிராமத்தில் அனைவருக்கும் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்காமல் ஒரு சில நபர்க ளுக்கு மட்டுமே வழங்கி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் நேற்று காலை 8:30 மணி அளவில் அரசூர் - திருவெண் ணெய்நல்லுார் சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல் லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால்  9:00 மணியளவில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

