ADDED : மே 10, 2026 04:37 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கிய முகாமிற்கு, குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி, பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றார். வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், முத்தமிழ் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
முகாமில், ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மொபைல் எண் திருத்தம், முகவரி மாற்றம் செய்தல், புதிய ரேஷன் அட்டை கோரிக்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான அங்கீகாரச்சான்று அளித்தல் போன்ற கோரிக்கைகள் முன் வைத்து, பொது மக்கள் பலர் மனுக்கள் வழங்கினர்.
மனுக்கள், கணினி வழியாக பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதேபோல், அனைத்து தாலுகாவிலும் நடந்த முகாமில் மனுக்கள் பெறப்பட்டன.
