ADDED : செப் 17, 2026 08:22 PM
விழுப்புரம்: மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
மாவட்டத்தில் நாளை ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும், குடிமை பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளுக்கு முகாமில் கோரிக்கை மனு கொடுக்கலாம்.
மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரும் கோரிக்கை மனு, பொதுவினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் கொடுக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
